2 ஆவின் அதிகாரிகள் சஸ்பெண்ட் : அமைச்சரின் ஆய்வால் அதிரடி


கோவையில் அமைச்சரின் ஆய்வைத் தொடர்ந்து 2 ஆவின் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் தலைமை பால் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொருட்களை இருப்பு விற்பனை குறித்த கணக்கு வழக்குகளை அவர் ஆய்வு செய்தார். ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் வாங்காமல் விற்பனை செய்யப்பட்டது அப்போது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் நாசர் உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக ஆவின் உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித்குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

x