வீட்டின் பின்பக்க கதவு உடைப்பு... 40 பவுன் நகைகள் அபேஸ்: நீதிமன்ற ஊழியருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்


திருமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஸ்டெனோவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தமிழ்செல்வி பணிக்கு சென்றுள்ளார். சுந்தரம், திருமங்கலம் அருகே உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச காலையில் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள். அவர்களது, தனியறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 40 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். மாலையில் வீடு திரும்பிய சுந்தரம் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சுந்தரம் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை அடிக்கப்பட்ட நகையின் மதிப்பு 11 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

x