பணவீக்கம்; விலைவாசி உயர்வு: 30 ஆண்டுகளில் மிகப்பெரிய ரயில் ஸ்டிரைக்கால் ஸ்தம்பிக்கும் பிரிட்டன்


பணவீக்கத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 30 ஆண்டுகளில் மிகப்பெரிய ரயில் வேலைநிறுத்தம் இன்று பிரிட்டனின் தொடங்கியது.

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ள இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட இரயில் ஊழியர்கள் கலந்துகொள்வதால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக பிரிட்டன் சுரங்கப்பாதையும் மூடப்பட்டது.

உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை நாட்டின் பணவீக்கத்தை 10 சதவீதத்தை நோக்கி தள்ளுவதால் ரயில் வேலைநிறுத்த போராட்டங்கள் அடுத்தது ஆசிரியர்கள், மருத்துவர்கள், கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை நோக்கியும் நகரும் என பிரிட்டன் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

கோவிட் தொற்றுநோயிலிருந்து வலுவாக மீண்ட பிரிட்டன் பொருளாதாரம், தொழிலாளர் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான ஏழ்மையான குடும்பங்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் பணவீக்கத்திற்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பொருளாதாரத்தின் அடிப்படைகளை சேதப்படுத்தும் என்று அரசு கூறியது, இதனால் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் உள்ளன.

"இந்த ரயில் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வணிகம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்" பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

x