தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை 19-ம் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை தொடங்கியது. ஜூலை 19ம் தேதி வரை https://tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அவரவர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் அல்லது சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் துணை கலந்தாய்வு அக்டோபர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறுகிறது. எஸ்.சி. கலந்தாய்வு அக்டோர் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. அக்டோபர் 18-ம் தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும். இந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லை என்றால் அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந்தாலும் இரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும் என்றும் சந்தேகங்களுக்கு 0462-2912081 மற்றும் 044 22351014, 044-22351015ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.