ஒரே வீட்டில் சிக்கிய கொடிய விஷமுடைய 22 கண்ணாடி விரியன் பாம்புகள்!


மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள தலேகான் தபாடேவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 22 கண்ணாடி விரியன் பாம்புகள் மீட்கப்பட்டன.

தலேகான் தபாடேவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 22 கண்ணாடி விரியன் பாம்புகள் நேற்று மீட்கப்பட்டன. இப்பகுதியை சேர்ந்த நிலேஷ் காரடே என்பவர் இந்த பாம்புகள் குறித்து தொலைபேசி மூலமாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மீட்புக்குழுவை சேர்ந்த ஜாகிர் ஷேக் மற்றும் ஜிகர் சோலங்கி ஆகிய இருவர் அந்த பாம்புகளை மீட்டு காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.

இந்த வீட்டில் உள்ள ஒரு பள்ளத்தில் கிராமவாசி ஒருவர் ஒரு குட்டி பாம்பைக் கண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது பெரிய பாம்பு மற்றும் அதன் குட்டிகள் என மொத்தம் 22 கண்ணாடி விரியன் பாம்புகளைக் கண்டறிந்ததாகவும் நிலேஷ் காரடே கூறினார்.

இந்திய துணைக்கண்டத்தை பூர்விகமாகக் கொண்ட 'ரஸ்ஸலின் வைப்பர்' எனப்படும் கண்ணாடி விரியன் பாம்பு விபெரிடே குடும்பத்தில் உள்ள ஒரு விஷப்பாம்பு ஆகும், இது இந்தியாவின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகவும் உள்ளது.

x