`காதல் குருட்டுத்தனமானது, பெற்றோர் அன்பைவிட சக்தி வாய்ந்தது'- காதல் ஜோடியை சேர்த்து வைத்த நீதிபதிகள் அதிரடி


காதல் குருட்டுத்தனமானது என்றும் சக்தி வாய்ந்தது என்ற கருத்து தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள், காதல் ஜோடி சேர்ந்து வாழ அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராமராஜுலு என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், "தனது மகள் நிசர்கா கல்லூரியில் விடுதியில் படித்து வந்தார். திடீரென அவர் காணாமல் போய்விட்டார். தனக்கு ஓட்டுநராக இருந்த நிகில் என்பவர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டார். தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவி நிசர்கா மற்றும் ஓட்டுநர் நிகில் ஆகியோரை ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இரண்டு பேரையும் காவல்துறையினர நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் மேஜர் என்றும் விருப்பப்பட்டுதான் நிகிலை திருமணம் செய்து கொண்டேன் என்று மாணவி நிசர்கா தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், பெறறோர், குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் அன்பு மற்றும் பாசத்தை காட்டிலும் காதல் வலிமையானது என்றும் காதல் குருட்டுத்தனமானது என்றும் சக்தி வாய்ந்தது என்றும் கூறினர். மேலும், காதல் கணவரோடு மாணவி சேர்ந்து வாழ நீதிபதிகள் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

x