'முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேளுங்கள்': ஹேக்கர்களால் முடக்கப்பட்டது தானே போலீஸ் இணையதளம்!


மஹாராஷ்ட்டிர மாநிலத்தின் தானே நகர காவல் ஆணையரக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது, அதில் இந்திய அரசு "உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம்" மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹேக்கர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

தானே காவல் ஆணையரக இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், “இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டுள்ளோம். தானே சைபர் கிரைம் குழு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட இணையதளத்தைத் திறந்ததும், திரையில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தியில், “இந்த தளம் ஒரு சைபர் குழுவால் ஹேக் செய்யப்பட்டது. ஹலோ இந்திய அரசு, அனைவருக்கும் வணக்கம். நீங்கள் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய மதப் பிரச்சினையில் சிக்கலை உண்டாக்குகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களிடம் விரைந்து மன்னிப்பு கேளுங்கள். எங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்படும்போது நாங்கள் அமைதியாக நிற்பதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

x