வாகனத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றியுள்ளார் பாதுகாப்பு படை வீரர். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம், சீமாசவுராட் என்ற பகுதியில் நேற்று மாலை சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ரிக் ஷா ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, வளைவில் ரிக் ஷா திரும்பியபோது தாயின் மடியில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது. அப்போது, வேகமாக பேருந்து ஒன்று வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காக போக்குவரத்தை சீரமைப்புக்கும் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் சுந்தர், உடனடியாக ஓடிச்சென்று கையைப் போட்டி பேருந்தை நிறுத்தும்படி சேகை காட்டினார்.
இதை எதிர்பார்க்காத ஓட்டுநரும் திடீர் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தினார். ஓடோடிச் சென்று குழந்தையை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றினார். ரிக் ஷாவில் இருந்து குழந்தை கீழே விழுந்ததைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு வந்த தாயிடம் பாதுகாப்பு படை வீரர் ஒப்படைத்தார். குழந்தையை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. வீரரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.