விமானத்தில் தாக்கப்பட்டாரா பினராயி விஜயன்? - சிபிஎம் எம்.பியின் கடிதத்தால் பரபரப்பு


பினராயி விஜயன்

கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டி சிபிஎம் எம்.பி சிவதாசன் டிஜிசிஏ தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், கறுப்புச் சட்டை அணிந்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவரை விமானத்திற்குள் தாக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டி, விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநருக்கு சிபிஎம் எம்பி டாக்டர் வி சிவதாசன் எழுதிய கடிதத்தில், “விமானப் பாதுகாப்பு விதிகள் மற்றும் மரபுகளை முற்றிலும் மீறி, கேரள முதல்வர் பினராயி விஜயனின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ஜூன் 13 அன்று கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் அவரை உடல் ரீதியாகத் தாக்கும் கொடூர முயற்சி குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் "என தெரிவித்துள்ளார்

கேரள காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு தொண்டர்களால் தூண்டிவிடப்பட்ட தாக்குதலுக்கு எதிராக, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நேற்று கண்ணூர் விமானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தினால் கேரளாவில் பதற்றமான சூழல் நிலவியது.

பினராயி விஜயன்

கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் ​​முதல்வர் பினராயி விஜயன் மீது தாக்குதல் முயற்சி நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த தாக்குதல் முயற்சி சம்பவத்தின் போது இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன் தாக்கியவர்களை தடுத்து நிறுத்தினார் என்றும் . ஆர்ப்பாட்டக்காரர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

x