வரதட்சணையாக ‘பைக்’ கிடைக்காத விரக்தி: தண்ணீர் குடிக்கச் செல்வதாகக் கூறி மண்டபத்தைவிட்டு ஓடிய மணமகன்


உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் மணமகன் ஒருவர், பெண் வீட்டார் வரதட்சணையாக பைக் கொடுக்க மறுத்ததால் திருமண மண்டபத்தைவிட்டு ஓடிய வினோதமான சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநில அமைச்சர் தரம் பால் சிங் முன்னிலையில் கான்பூர் மாவட்டத்தின் ஷரிஃபாபூர் கிராமத்தில் 144 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு மணமகன் தண்ணீர் குடிக்கச் செல்வதாகக் கூறி மண்டபத்தைவிட்டு வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், அவரைப் பல இடங்களில் தேடினர். எனினும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறையினர், “அந்த மணமகன் பெண்ணின் வீட்டாரிடம் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். முன்பு வாங்கித் தருவதாகச் சம்மதித்திருந்த அவர்கள், திருமண நாளன்று நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தங்களால் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கித்தர முடியாது என்று கைவிரித்தனர். இதனால் விரக்தியடைந்த அந்த மணமகன் மண்டபத்தைவிட்டு வெளியேற திட்டமிட்டு, தப்பி ஓடிவிட்டார்" என்று தெரிவித்தனர்.

x