44 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு: காணொலி மூலம் பார்வையிட்ட அமைச்சர்!


நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட 44,000 கிலோ போதைப் பொருட்கள், 'போதை ஒழிப்பு தினமான' நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அழிக்கப்பட்டது.

மத்திய சுங்க வாரியம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI ) ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில் 42,054 கிலோ போதைப் பொருட்கள், 1,710,845 மாத்திரைகள், 72,757 இருமல் மருந்து பாட்டில்கள் மற்றும் 16,336 போதை ஊசி மருந்துகள் உட்பட 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் நாடு முழுவதும் உள்ள 14 இடங்களில் அழிக்கப்பட்டன.

குஜராத்தின் கட்ச், மகாராஷ்ட்டிராவின் புனே, தமிழ்நாட்டின் விருதுநகர், பிஹாரின் பாட்னா, மேற்கு வங்கத்தின் சிலிகுரி உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்களை அழிக்கும் நிகழ்வினை காணொலி காட்சி மூலமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். போதை ஒழிப்பு தினத்தின் முக்கிய நிகழ்வாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் அபாயமற்ற முறையில் இந்த போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

x