செல்போனுக்கு தடைப் போட்ட அம்மா... உயிரை மாய்த்துக் கொண்ட மகள்: கேரளத்தில் நடந்த சோகம்


செல்போனை பயன்படுத்த பெற்றோர் தடை விதித்ததால் வேதனையில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கோட்டைக்ககம் கிராமத்தைச் சேர்ந்த ரதீஷ்-சிந்து தம்பதியரின் மகள் ஷிவானி. 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், சமூக ஊடக நட்பு தொடர்பாக நேற்றிரவு தனது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, செல்போனை பயன்படுத்த மகளுக்கு தடை போட்டுள்ளார் சிந்து. இதனால் மனமுடைந்த ஷிவானி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை கைப்பற்றிய காவல் துறையினர் மர்ம மரணமாகப் பதிவுசெய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு யூடியூப் வீடியோவால் திருவனந்தபுரம் கல்லம்பலத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஜீவா மோகன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். கொரியன் பாண்ட் வீடியோக்களின் அடிமையாக இருந்துள்ளார் ஜீவா. இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் மன ரீதியான பிரச்சினைக்கும் ஆளாகியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

x