டெல்லி மக்களுக்கு இனிப்பான செய்தி: முதல்வர் கேஜ்ரிவால் அசத்தல் அறிவிப்பு


அர்விந்த் கேஜ்ரிவால்

``டெல்லியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி அனைவருக்கும் 24×7 தண்ணீர் விநியோகம் செய்யப்படும்'' என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ரோகினி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், அனைத்து நாட்களிலும், எல்லா நேரமும் 24×7 தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி நீரை மேம்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது. யமுனை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, இயற்கை மற்றும் அறிவியல் முறைகளின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் நீர் உற்பத்தி அளவு 930 எம்ஜிடியிலிருந்து 990 எம்ஜிடியாக அதிகரித்துள்ளது. ரோகினி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரித்து அதன் மூலம் நிலத்தடி நீர்மட்ட அளவை அதிகரிக்க நாங்கள் பல ஏரிகளை உருவாக்கி வருகிறோம்" என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம்சாட்டி டெல்லி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

x