மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்… எமனாக வந்த லாரி: பறிபோன 7 பேரின் உயிர்!


டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸில் இன்று காலை உத்தர பிரதேசத்திற்கு 7 பேர் சென்று கொண்டிருந்தனர். உத்தர பிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தடுப்புகள் மீது மோதி சாலையின் மறுபக்கத்திற்கு சென்றது.
அப்போது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," டெல்லியில் இருந்த குர்ஷித்(55), தனது மனைவி சாகிரானை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இவர்கள் இருவர் மட்டுமின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர். விபத்தில் 7 பேர் பலியானதற்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

x