நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு : 22 பேரின் நிலை என்ன?


நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் பயணம் செய்த 22 பேரின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

நேபாளம் போகாராவில் இருந்து நேற்று காலை தாரா ஏர் விமானம் புறப்பட்டது. ஆனால், இந்த விமானம் சில நிமிடங்களில் காணாமல் போனது. விமானத்தில் இரண்டு ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் ,13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உள்பட 22 பேர் பயணித்த நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டது.

விமானத்தின் சிக்னல் மற்றும் விமானியின் செல்போன் சிக்னல் ஆகியவை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா என நேபாள ராணுவம் தேடிய போது, விமானம் விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

முஸ்டங் மாகாணம் தசங் - 2 என்ற பகுதியான சனோஸ்வர் மலைப்பகுதியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் உறுதி செய்தது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் சிதறிக் கிடப்பதற்கான புகைப்படத்தையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதில் பயணித்த 22 பேரின் நிலை என்ன என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பனிப்பொழிவு காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட மீட்பு பணி இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

x