அதிகாலையில் வெடித்து சிதறிய சிலிண்டர்… தரைமட்டமான வீடு: தூக்கத்திலேயே பறிபோன 4 பேரின் உயிர்!


ஆந்திராவில் இன்று அதிகாலை கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானி பாய். இவர் வீட்டில் மகன் தாடு, மருமகள் சர்புனி, பேரன் பெரோஸ் ஆகியோருடன் நேற்று உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்தது. இதில் ஜானிபாயின் வீடு கடும் சேதம் அடைந்தது. இந்நிலையில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஜானிபாய் வீடு அருகில் இருந்த 2 வீடுகளும் சேதமடைந்தன. இதனால் அவ்வீட்டைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சசம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x