`மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் எனது தந்தை'- ராஜீவ் காந்தி நினைவு நாளில் மகன் ராகுல் காந்தி உருக்கம்


பேரறிவாளவன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ``மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் என தந்தை ராஜீவ் காந்தி'' என்று அவரது நினைவு நாளில் மகன் ராகுல் காந்தி உருக்கமாக கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. சுமார் 31 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் வெளியே வந்தார். மேலும் 6 பேரை விடுதலை செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

இதனிடையே, ராஜீவ் காந்தி மறைந்து இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில், தனது தந்தையின் நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது தந்தை ராஜீவ் காந்தி எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்க கற்றுக் கொடுத்தவர். தந்தை ராஜீவ் காந்தி இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார்" என்று உருக்கமான கூறியுள்ளார்.

x