சிபிஐ வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 14 நாள் காவல்


புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது.தேர்தலுக்காக இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கேஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி திஹார் சிறையில் மீண்டும் ஆஜரானார். அவருக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு டெல்லி உயர் நீதி மன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் கேஜ்ரிவால் மீது,சிபிஐ.,யும் வழக்குப்பதிவு செய்தது. அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் விசாரித்த சிபிஐ அதிகாரிகள், நேற்று அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது காவலை நீட்டிக்க சிபிஐ வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து கேஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிபதி சுனேனா சர்மா உத்தரவிட்டார்

x