மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகை ரத்து: கோடிகளில் வருவாயை குவித்த இந்தியன் ரயில்வே


மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துவிட்ட நிலையில், அதன் மூலம் கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ரயிலில் எங்கு பயணம் செய்தாலும் மூத்த மக்களுக்கு பாதி டிக்கெட் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவலால் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் கரோனா குறையத் தொடங்கியதன் மூலம் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டன. கரோனாவை காரணம் காட்டி, மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை மத்திய ரயில்வேத் துறை ரத்து செய்தது. 2 ஆண்டுகள் ஆள நிலையில், மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரயில்வேத் துறை இன்னும் வழங்கவில்லை. உடனடியாக இந்த சலுகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் ரயில்வேத் துறைக்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள இந்தியன் ரயில்வே, மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாயாக 1500 கோடி கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x