சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகள்


முதல்வர் தியோ சாய்

ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை மற்றும் வளர்ச்சிதிட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்வர் தியோ சாய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதே அரசின் முக்கிய நோக்கம்.

அதன் அடிப்படையில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில்சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, ரயில், இதர மேம்பாட்டுபணிகளை விரைவுபடுத்த அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.