கணவன், உறவினர்கள் கைவிட்ட நிலையில் இறந்து போன அங்கன்வாடி ஊழியருக்கு அவருடன் பணியாற்றி பெண் ஊழியர்களே இறுதி சடங்கு செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சௌமியா. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனித்து வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவரை கணவனோ, உறவினரோ வந்து பார்க்கவில்லை. இந்த நிலையில் செளமியா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து சௌமியாவின் உடலைப் பெற்றுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் அவரது உடலை, உறவினர்கள் வருவார்கள் என்று நாள் முழுவதும் மயானத்தில் வைத்து
காத்திருந்தனர். ஆனால், செளமியாவின் கணவனோ, உறவினர்களோ வரவில்லை. இதனால் செளமியாவின் உடலை அவருடன் பணிபுரிந்த பெண் ஊழியர்களே தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.