இனி ஒரு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2355: அதிரடி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!


வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் விலை அதிரடியாக ரூ.102 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு உயர்ந்து வருவதால் அனைத்து பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென இன்று முதல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் 102 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை 2253 ரூபாயில் இருந்து 2355.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வணிக சிலிண்டரின் விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு முன் மார்ச் மாதம் வணிக சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 102 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்கு பின் இப்போது வரை வணிக சிலிண்டர் விலை மொத்தமாக 457 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

x