புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது.
முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1980-ல் பாரதிய ஜனதா கட்சித் தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் அத்வானி. 1990-களில் பாஜகவை எழுச்சி பெறச் செய்ததில் அத்வானி முக்கியப் பங்காற்றினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் துணை பிரதமராக பதவி வகித்த எல்.கே.அத்வானிக்கு கடந்த பிப்ரவரியில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்தது.