ஒரே ஆண்டில் 85 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு! - கரோனா ஊரடங்கில் நடந்த அதிர்ச்சி


இந்தியாவில் கரோனா ஊரடங்கு காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தன. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்த 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்டிஐ) மூலம் தகவல் கேட்டிருந்தார்.

இதன்படி 2020-21-ம் ஆண்டில் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மூலம் இந்தியா முழுவதும் 85,268 பேருக்கு எச்ஐவி தொற்று உருவாகியுள்ளது என்து உறுதியாகியுள்ளது. எச்ஐவி தொற்று அதிகரிப்பில் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

x