வேலை கிடைக்காத நிலையில், கல்லூரி வாசல் முன்பு டீக்கடை நடத்தி வருகிறார் பட்டதாரி பெண் ஒருவர்.
பிஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் 2 ஆண்டுகளுக்கு கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில், பிரபுல் பில்லோரை தன் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு டீக் கடை வைக்க முடிவு செய்தார் பிரியங்கா. பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி அருகே பொருளாதார பட்டதாரி பிரியங்கா குப்தா டீக்கடை நடத்தி வருகிறார். ஐந்து வகையான டீயை ரெடி பண்ணும் பிரியங்கா, பணத்தை பேடிஎம் மூலம் பெறுகிறார்.
இது குறித்து பிரியாங்கா கூறுகையில், "நான் 2019-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தேன். ஆனால் கடந்த 2 வருடங்களாக வேலை கிடைக்கவில்லை. நான் பிரபுல் பில்லோரிடமிருந்து உத்வேகம் பெற்றேன். பல சாய்வாலாக்கள் உள்ளன. ஏன் ஒரு சாய்வாலி இருக்கக்கூடாது?" என்று கூறினார்.
யார் இந்த பிரபுல் பில்லோர். எம்பிஏ படித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபுல் பில்லோர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தெருவில் டீ விற்பவராக தனது எதிர்காலத்தை தொடங்கினார். தனது 22 வயதில் 'எம்பிஏ சாய்வாலா' என்ற உணவகத்தின் முதலாளியாகி ஆண்டிற்கு ரூ.3 கோடி டர்ன் ஓவர் செய்யும் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.