இரவில் மும்பையில் தடம்புரண்ட புதுச்சேரி விரைவு ரயில்: உயிர் தப்பிய பயணிகள்


மும்பை தாதரில் இருந்து இரவில் புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயிலில் 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பையில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து மும்பைக்கும் தாதர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மும்பை தாதரில் இருந்து நேற்று இரவு புதுச்சேரிக்கு விரைவு ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் தடம்புரண்டது. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் பயணிகளை மீட்டனர். யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சாளுக்யா எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி கடக் எக்ஸ்பிரஸ் இடையே மட்டுங்கா ரயில் நிலையம் அருகே சிறிய அளவில் மோதியதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தினால் தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சிஎஸ்எம்டி-கடக் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

x