மேடை அருகே குண்டு வீச்சு: உயிர் தப்பிய பிஹார் முதல்வர்


பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் நாளந்தா நகரில் ஜன்சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிதிஷ் குமார் இருந்த மேடை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார், உடனடியாக நிதிஷ்குமாரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

x