சபரிமலை நடை திறப்பு: 18-ம் தேதிவரை தரிசிக்கலாம்


சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நிகழாண்டு சித்திரை கனிகாணும் நிகழ்விற்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது.

கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த கோயிலுக்கு தென்னிந்தியாவில் இருந்து அதிகமான பக்தர்கள் ஆன்மிக யாத்திரை மேற்கொள்வது வழக்கம். பக்தர்கள் மண்டலகாலத்தில் அதிகமாக வரும்போது அதிகளவில் கூட்டநெரிசலில் சபரிமலை சிக்கித் தவிக்கிறது. இதனாலேயே ஒவ்வொரு மலையாள மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்திரை கனிகாணல் நிகழ்வை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையைத் திறந்து மூலவருக்கு விளக்கேற்றினார். 18-ம் படி வழியாகச் சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார். இன்று இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நாளை முதல் ஏப்ரல் 18-ம் தேதிவரை தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். வரும் 15-ம் தேதி சபரிமலையில் கனிகாணும் நிகழ்வு நடக்கிறது. அன்றைய நாளில், அதிகாலை 4 மணிமுதல் அய்யப்பனை கனி, காய்கறி அலங்காரத்தில் பார்க்கலாம். இணையவழியில் முன்பதிவு செய்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம். வரும் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.

x