திருப்பதி அருகே நிலநடுக்கம்!


ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம், திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ. தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

x