மேலும் ஒரு இடி... வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை அதிரடி உயர்வு


சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடந்து அடுத்தபடியாக வர்த்தக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை ரூ.268.50 உயர்ந்து சென்னையில் ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படும் எனவும், இந்த விலை மற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.965.50-க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு விலை மாற்றம் செய்யப்பட்டதால் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரவும் நிலையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை உயர்வு உணவகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

x