கல்வி முறையை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுடெல்லி: கடந்த 18-ம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டபோது ஆயிரக்கணக்கானோர் என்னிடம் வினாத்தாள் கசிவு குறித்து புகார் கூறினர்.

ரஷ்யா – உக்ரைன் போரை பிரதமர் மோடி நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இந்தியாவில் வினாத்தாள் கசிவுகளை பிரதமர் மோடியால் நிறுத்த முடியவில்லை அல்லது அவர் நிறுத்த விரும்பவில்லை. பாஜகவின் தாய் அமைப்பால் (ஆர்எஸ்எஸ்) நாட்டின் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே வினாத்தாள் கசிவுகளுக்கு காரணம். இது மாறாத வரை, வினாத்தாள் கசிவுகள் தொடரும். கல்வி முறை கைப்பற்றப்படுவதற்கு பிரதமர் மோடி வழிகோலினார். இது ஒரு தேசவிரோதச் செயல். இவ்வாறு ராகுல் கூறினார்