பி.எஃப் வட்டி 8.10 சதவீதமாக திடீர் குறைப்பு


2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் 230வது மத்திய வாரிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான வட்டி வீதத்தை முடிவு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், “கடந்த ஆண்டில் நிலவி வந்த பிஎஃப் வட்டியான 8.50 சதவீதத்திலிருந்து 8.10% சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டு” முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பி.எஃப் திட்டத்துக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த அளவு வட்டி என்று கூறப்படுகிறது. வட்டி வீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைக்கப்பட்டுள்ளது கோடிக்கணக்கான மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

x