காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை


காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கவாதி உள்பட 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் நேற்றிரவு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புல்வாமாவின் ஷுவாக்லன் என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்திலும் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஆவார்.

"புல்வாமாவில் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாதிகளும், கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

x