வர்த்தக எரிவாயு விலை எகிறியது... ஆனால் வீட்டு சமையல் எரிவாயு விலை?


வர்த்தக எரிவாயு விலை ரூ.105 உயர்த்தப்பட்டு ஒரு எரிவாயு விலை ரூ.2,145.50க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சென்னையில் ரூ.915.50 ஆக விற்கப்பட்டது. நடப்பு மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.

அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வர்த்தக உபயோக எரிவாயு விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது. எனினும் தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படுகிறது.

x