ஹிஜாப் வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு!


ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர், தாங்கள் ஹிஜாப் அணிந்ததற்காக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாதை கண்டித்து கேள்வி எழுப்பினர். ஹிஜாப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இதர கல்வி நிலையங்களிலும் பலதரப்பு மாணவர்களின் மத்தியில் போராட்டம் பரவியது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தோர் காவி அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவும் வெடித்ததை தொடர்ந்து கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விரிவான அமர்வுக்கு மாற்றப்பட்டது. மேலும் வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை, கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத அடையாளங்களை அணிந்து செல்ல தடைவிதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

தினசரி அடிப்படையில் 11 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் விசாரணைகள் இன்று(பிப்.25) நிறைவடைந்தன. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாது ஒத்திவைத்து நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

x