உ.பி-யில் தேர்தல் பணியில் கலக்கும் பெண் அலுவலர் ரீனா


ரீனா துவேதி

வழக்கமாக தேர்தல் சமயங்களில் திரைப்பட நட்சத்திரங்களையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது உண்டு. இதைப் பார்க்க கூடும் பொதுமக்களின் கூட்டம் வாக்குகளாக மாறும் என்பது அதன் பின்னணி. இந்தவகையில் திரைப்பட நாயகியோ எனும் அளவில் உத்தரப்பிரதேசத்தின் ஒரு பெண், கடந்த 2019 மக்களவை தேர்தலில் பொதுமக்களை கவர்ந்தார்.

விரிந்தக் கூந்தலுடன் மஞ்சள் சேலையும், கூலிங்கிளாசும் அணிந்த அவரது புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. பொதுமக்களின் கைப்பேசிகள் வாட்ஸ்அப்பிலும் அப்பெண்ணின் அழகு புகைப்படம் நிரம்பி வழிந்தது. தன் கைகளில் வாக்குப்பதிவு இயந்திரம் ஏந்திச்சென்றவரை யார்? என அறிவதில் பலரும் ஆர்வம் செலுத்தினர். வேறுவழியின்றி அவரை பற்றி விசாரித்த தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் படத்துடன் செய்திகளை வெளியிட வேண்டியதாயிற்று.

உபியின் தலைநகரான லக்னோவின் ஒரு வாக்குச்சாவடியில் அப்பெண்ணின் சகஅலுவலர் எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ஒரே இரவில் அப்படம் பலரையும் கவர்ந்து வாட்ஸ்அப்பிலும் வைரலானது. உபி அரசின் பொதுப்பணித்துறையில் எழுத்தராக இருக்கும் அவரது பெயர் ரீனா துவேதி எனத் தெரிந்தது. இவர் நாளை நான்காவது கட்ட தேர்தலில் லக்னோவின் வாக்குச்சாவடியில் பணிக்காக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ரீனா உபி சட்டப்பேரவை தேர்தலிலும் ஆஜராகி, சமூகவலைதளங்களில் வைரலாகத் துவங்கி உள்ளார்.

ரீனா துவேதி

லக்னோவின் மொஹல்லாகன்ச் தொகுதியின் 114வது எண் வாக்குச்சாவடிக்கு மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ரீனா வந்த படம் இன்று மாலை வெளியானது. இந்த தேர்தலில் ரீனாவின் தோற்றம் நவீன உடைகளுக்கு மாறி இருந்தது. இந்தமுறை அவர், பெண்களுக்கானப் பேண்ட் மற்றும் கைகள் இல்லாதக் கறுப்புநிறச் சட்டையுடன்

வெயிலுக்கான கண்ணாடியும் மறக்காமல் அணிந்துள்ளார். இதனால், முன்பை விட விரைவாக ரீனா பணியிலுள்ள படங்கள் செய்தியாகி விட்டன. இவரை சரியாக அடையாளம் கண்ட பலரும் ரீனாவுடன் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

மின்னணு வாக்குப் பெட்டியை கொண்டு செல்லும் ரீனா

இது குறித்து ரீனாவிடன் கேட்டால் அவர், ‘உடைகளிலும் சற்று மாற்றம் தேவை’ என ஒரே வரியில் பதிலளிக்கிறார். மணமாகி கணவர் மற்றும் ஒரு மகனுடன் தன் லக்னோ வீட்டில் வாழும் ரீனா, எப்போதும் தன் உடலமைப்பை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க அதிக கவனம் செலுத்துபவர்.

கடந்த 2004ல் ரீனாவின் கணவர் உடல்நலம் குன்றியதால் இறந்து விட்டார். பிறகு லக்னோவின் அருகிலுள்ள சோன்பத்ராவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சஞ்சய் துவேதியை 2013ல் மறுமணம் செய்துள்ளார் ரீனா. இவரது சமூகவலைதளக் கணக்குகளில் பல லட்சம் பேர் பின்தொடர்பவர்களாக உள்ளனர். அவற்றில் தனது அழகு வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து மகிழ்கிறார் ரீனா.

x