வாகனங்களுக்கு தீ வைப்பு; பேருந்துகள் மீது தாக்குதல்!


எரிக்கப்பட்ட இருசக்கர வாகனம்

பஜ்ரங் தள் பிரமுகர் கொலையால் ஷிவமோகா நகரில் வன்முறை வெடித்துள்ளது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு, கடைகள், பஸ், கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாட க மாநிலம், ஷிவமோகா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(24). பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த இவர், நேற்றிவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் மாவட்டம் பதற்றம் நிலவியது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இன்று காலை ஹர்ஷாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.

உடைக்கப்பட்ட கடைகள்

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சி.வி. நகர் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் திடீரென கடைகள், பஸ், கார்கள் அடித்து நொறுக்கியது. இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், ஷிவமோகா நகரில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹர்ஷாவை கொலை செய்தவர்களில் 2 பேரை ஷிவமோகாவிலும், மங்களூரில் ஒருவரையும், பெங்களூருவில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ரங் தள் பிரமுகர் கொலையால் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. வன்முறையை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், "நிலைமையை ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கை பராமரிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோன்" என்று தெரிவித்தார்.

x