காஷ்மீர் பஸ் தாக்குதல் வழக்கை என்ஐஏ விசாரிக்கும்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு


புதுடெல்லி: உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர் கள் காஷ்மீரில் உள்ள கோயில் களுக்கு பஸ்ஸில் புனிதப் பயணம் மேற்கொண்டனர்.

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி சென்று கொண்டிருந்த அந்த பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நிலை தடுமாறிய பஸ் சாலை அருகேஉள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர். இது போல காஷ்மீரில்கடந்த வாரத்தில் அடுத்தடுத்துபல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 13-ம் தேதி உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற் றனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம், அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது. இந்நிலையில், பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)விசாரிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

x