உணவுத் தட்டுப்பாட்டால் சென்னை டூ குஜராத் 1000 முதலைகள்!


சென்னை முதலை பண்ணை

இந்தியாவின் மிகப்பெரிய முதலை பூங்காக்களில் ஒன்றாக விளங்கும் சென்னை முதலை பண்ணையிலிருந்து 1000 முதலைகள் குஜராத்துக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை முதலைப் பண்ணையில் முதலைகளின் பெருக்கம் பல மடங்காக அதிகரித்ததால் அவற்றுக்கு போதுமான உணவளிக்க முடியாத சூழல் ஏற்படவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சென்னை முதலை பண்ணை

இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. தனித்தனியாக மரப்பெடிக்களில் முதலைகளை வைத்து டிரக் லாரி மூலமாக குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு அவை கொண்டு செல்லப்படவிருக்கின்றன. ஜாம்நகரில் உள்ள பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் புனரமைப்பு மையம் புதிய இல்லமாக மாற்றக் காத்திருக்கிறது. 1000 முதலைகளை சென்னையிலிருந்து குஜராத்துக்குக் கொண்டு செல்வதற்கான அனுமதியை மத்திய வனவிலங்கு சரணாலய அதிகாரம் வழங்கியுள்ளது. வன விலங்குகளை இடமாற்றம் செய்ய வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 கீழ் பிரிவு 38(ஐ) அனுமதிக்கிறது. இதன்படி விரைவில் 350 ஆண் முதலைகளும் 250 பெண் முதலைகளும் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படவிருக்கின்றன.

கரோனா காலத்தில் திரையரங்கு, மால்களுக்கு சென்ற அளவுக்கு மக்கள் சென்னை முதலை பண்ணைக்கு செல்லவில்லை. மக்கள் வருகையின்றி ஏற்பட்ட நிதி நெருக்கடியால் சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் முதலைகளை பராமரிப்பது சிரமமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்கெனவே இரண்டு பேச்சுகளாக 300 முதலைகள் ஜாம்நகருக்கு அனுப்ப நேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்திய வன விலங்கு சரணாலய அதிகார இணையதளத்தின் 2019-20-ம் ஆண்டின் அறிக்கையின்படி சென்னை முதலைப் பண்ணையில் மொத்தம் 17 விதமான 2000 முதலைகள் வளர்க்கப்பட்டுவந்தன. அவற்றில் 1820 சதுப்புநில முதலைகள். இந்நிலையில் போதுமான உணவளிக்க முடியாத காரணத்துக்கான 50 சதவீத முதலைகள் தத்துக்கொடுக்கபட்டிருப்பது கவலை அளிக்கிறது. மீதமுள்ள முதலைகளையாவது காக்க சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

x