காஷ்மீருக்கு பாகிஸ்தான், உலக வங்கி பிரதிநிதிகள் வருகை


புதுடெல்லி: உலக வங்கி வழிகாட்டுதலின்படி 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிந்து, ஜீலம், செனாப் மேற்கு நதிகளை பாகிஸ்தானுக்கும், கிழக்கு நதி களான ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகள் இந்தியாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நீர் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாகிஸ் தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கடந்த 2022 அக்டோபரில் உலக வங்கி ஒரு நடுநிலை நிபுணரை நியமித்தது. இதன்படி காஷ்மீர் திட்டங்களை பார்வையிட பாகிஸ்தான், உலக வங்கி பிரதிநிதிகள் இந்தியா வரவுள்ளனர். இதுபோன்ற பயண திட்டத்தை இந்தியா அனுமதிப்பது இதுவே முதல் முறை. சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரதிநிதி களிடையே நடைபெறும்முதல் சந்திப்பு இது.

x