மதமாற்றங்களுக்கு அடிப்படை பாகுபாடா?


சமீப ஆண்டுகளாக மதமாற்றம் குறித்த பேச்சு ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. மதமாற்றத்துக்கு மதம் சார்ந்த விருப்பம், பெரும்பான்மை மதத்தினரின் புறக்கணிப்பு, அங்கீகாரம் என பல காரணிகள் உள்ளன. சரி, மதமாற்றம் என்றால் இன்றைய கால கட்டத்தில், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவது என பொதுவான எண்ணம் அனைவரின் மத்தியிலும் உள்ளது. அதுபோன்ற தோற்றமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டமைக்கப்பட்டும் வருகிறது.

இது மட்டும்தான் மதமாற்றமா?

இந்துவில் இருந்து இஸ்லாம், பவுத்தம் மற்றும் இஸ்லாம், கிறிஸ்துவம் மதத்தில் இந்து மதத்துக்கு மாறுவதும் மதமாற்றம்தான். ஆனால், இம்மத மாற்றங்கள் பேசுபொருளாவதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இம்மத மாற்றம் நடைபெறகிறது என்பதால் பேசு பொருளாவதில்லை என்றே வைத்துக் கொள்ளலாம்.

எதனால் குறைந்த எண்ணிக்கையில் நடைபெறுகிறது. இஸ்லாம், பவுத்த மதத்தில் உள்ள பழமையான மதக் கட்டுப்பாடு அல்லது பாகுபாடா என்றால், அதை அறுதியிட்டு சொல்ல இயலாது. அதே கிறிஸ்துவ மதத்துக்கு அதிக எண்ணிக்கையில் மதமாற்றம் நடைபெறுகிறது என்றால், என்ன காரணம். அங்கு மதக்கட்டுப்பாடும், பாகுபாடின்மையும் இல்லையா என்றால், அதையும் அறுதியிட்டு சொல்ல இயலாது.

அரசின் புள்ளிவிவரப்படி நாட்டின் பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம் என வேறு மதத்துக்கு மாறுவதற்கு என்ன காரணம். இந்து மதத்தில் உள்ள பாகுபாடின்மை, கட்டுப்பாடுகளா என்றால் பாகுபாடின்மை என்பதை உறுதியாகச் சொல்லலாம். இந்து மதத்தில் நிலவும் பாகுபாடின்மையே பெரும்பான்மை மதத்தில் இருந்து சிறுபான்மை மதத்தை நோக்கித் தள்ளுகிறது.

வேறு காரணங்கள் பல இருந்தாலும் பாகுபாடின்மை முதன்மை இடம்பிடிக்கிறது. இதற்கு அடிப்படை ‘ஜாதி’ என சட்டமேதை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் பல இடங்களில் வலியுறுத்திப் பேசியும், எழுதியும் உள்ளனர். இந்தப் பாகுபாடுகள் கிறிஸ்துவம், இஸ்லாமிலும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பான்மையைப் பற்றிதான் அதிகம் பேசமுடியும்.

அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தில் நிலவும் பாகுபடுகளை களையாமல், மதமாற்றத்தை தடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். அப்படியே பாகுபாடின்மை முழுமையாகக் களையப்பட்டாலும், ஒருவரின் விருப்பத்தை எந்த அணை போட்டும் தடுக்க இயலாது. எது எப்படியாகினும் பாகுபாடே, ஒன்றைவிட்டு மற்றொன்றை நோக்கி நகர்வதற்கான அடிப்படை காரணம்.

அதற்கு மதங்களும் விதிவிலக்கல்ல.

x