இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா; ஒரே நாளில் 2.86 லட்சம் பேர் பாதிப்பு


கரோனா பரிசோதனை

இந்தியாவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், ஒரே நாளில் கரோனாவால் 573 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வந்தநிலையில், நேற்று முதல் தினசரி பாதிப்பு அதிகரித்தது. நேற்று 2,85,914 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலரப்படி, ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. கரோனா பாதிப்பு 4,00,85,116 லிருந்து 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,06,357 பேர் கரோனா பாதிப்பில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 லிருந்து 3.76,77,328 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கரோனாவால் 573 பேர் இறந்துள்ளனர். இதனால் கரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இதுவரை 163.84 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 22,35,267 கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

x