பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 மருத்துவ மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு!


மகாராஷ்டிர மாநிலம் தியோலியிலிருந்து வார்தாவுக்குச் செல்லும் வழியில் உள்ள செல்சுரா கிராமம் அருகே நேற்று நள்ளிரவு நடந்த சாலை விபத்தில், ஒரே காரில் சென்ற 7 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் வார்தாவில் உள்ள சவாங்கி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. அவர்களில் பாஜக எம்எல்ஏ விஜய் ராகங்தாலேயின் மகனான அவிஷங்கரும் ஒருவர்.

கார் கட்டுப்பாட்டை இழந்ததால், பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

x