சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு முடிவு எப்போது?


சிபிஎஸ்சி

சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்சி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களின் கற்றல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய நிலையை தவிர்க்கும் விதமாக சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 50% பாடத்திட்டத்தின்படி முதல் பருவத்தேர்வும், மீதமுள்ள 50% பாடத்திட்டத்தின்படி இரண்டாம் பருவத்தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி முதல் பருவத்தேர்வானது சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதமும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முதல் பருவத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று (24/1/2022) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் சிபிஎஸ்சி அறிவித்தது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளமான DigiLocker UMANG ஆப்களிலும் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை விரைவில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

x