இந்திய ஆட்சிப் பணி விதிகளைத் திருத்துவது கூட்டுறவுக் கூட்டாட்சியைப் பலவீனப்படுத்தும்!


அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானவை என்றும் இந்த உத்தேசத் திருத்தங்களுக்குத் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துகொள்வதாகவும் பிரதமர் மோடிக்கு இன்று எழுதியிருக்கும் கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில், ‘பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தத் திருத்தங்கள், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களின் கொள்கைகளை அமல்படுத்தும் விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும். அது கூட்டுறவுக் கூட்டாட்சியைப் பலவீனப்படுத்தும்’ என எழுதியிருப்பதாக ட்வீட் செய்திருக்கிறார் பினராயி விஜயன்.

x