கேரளத்தில் ஞாயிறு ஊரடங்கு


கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழகத்தில், கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதேபோல், கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கேரளமும் இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

கேரளத்தில், நேற்று ஒரேநாளில் 46,387 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கேரளத்தில் முதல் அலையின் போதிருந்தே, இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாகும். இந்த அளவுக்கு கரோனா தொற்று தீவிரமாக்ப் பரவியிருப்பதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக ஞாயிறு ஊரடங்கை அறிவித்துள்ளது கேரள அரசு. வரும் 23, 30 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முதல்கட்டமாக முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இதேபோல் அரசுப்பணியாளர்களில் 2 வயது வரையான குழந்தைகளைக் கொண்டிருப்போர், புற்றுநோயாளிகள் ஆகியோருக்கு வீட்டிலிருந்தே வேலை அனுமதிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை நிதியாக மாவட்டங்களுக்கு ரூ.22 கோடி கரோனா தடுப்புப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

x