இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா?


உச்சநீதிமன்றம்

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என எப்படி கூற முடியும்? என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பட்டினிச் சாவுகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

வறுமையில் வாடும் மக்களுக்கு சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக நாளிதழில் செய்திகள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியதோடு, நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவு தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

x