கரோனாவால் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்!


கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்

இந்தியாவில், 1.47 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இரண்டு பேரையுமே இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கரோனா தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு முதல் அலையில் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், 2021-ம் ஆண்டு 2-வது அலையில் லட்சக்கணக்கானோர் மரணம் அடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர்.

இந்நிலையில், கரோனா தொற்றால் 1.47 லட்சம் குழந்தைகள் தாயையோ, தந்தையோ அல்லது இரண்டு பேரையுமே இழந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் ‘பால் ஸ்வராஜ் கொவைட் கோ’ என்ற வலைதளத்தில் பதிவு செய்துவருகிறது.

கரோனா தொற்றின் 3-வது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் வரும் 19-ம் தேதி காணொலி வாயிலான கூட்டத்தை ஆணையம் நடத்த உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x