உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிலிருந்து விலகிய 3 அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வந்த 3 அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகிய 9 பேரும் தங்களை சமாஜ்வாதி கட்சியில் இணைத்து கொண்டனர்.
லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அனைவரும் அக்கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா, பாஜக, நாட்டு மக்களையும், உத்தரப் பிரதேசத்தையும் தவறாக வழி நடத்தி மக்களின் கண்களில் மண்ணை தூவியதாக குற்றம்சாட்டினார்.