74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சகோதரர்கள்!


முகமது ஹபீப்- முகமது சித்திக்

இந்தியா - பாக். பிரிவினையால் பிரிந்திருந்த சகோதரர்கள், 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிந்தபோது முகமது சித்திக் என்பவரும், முகமது ஹபீப் என்பவரும் சிறு குழந்தைகளாக இருந்தனர். இதில் சித்திக் பாகிஸ்தானின் பைஸ்லாபாத்திலும், அவரது அண்ணன் ஹபீப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சமூக ஊடகங்கள் உதவியால் உறவினர்கள், சித்தி, ஹபீப் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இருவரையும் நேரில் சந்திக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்துவாராவில் சகோதரர்கள் சித்திக், ஹபீப் நேரில் சந்தித்தனர். அப்போது, இருவரும் கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 74 ஆண்டுகளுக்குப் பிறகு, சகோதரர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.

x